காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். அதேவேளையில், காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதற்காக எகிப்தின் எல்லைப் பகுதியான ரஃபாவை பகுதியளவில் திறக்க அனுமதிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் நேற்று (03.12.2025) நடத்தப்பட்ட தாக்குதல், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியிருப்பதைக் குறிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவின் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு ரஃபாவில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ராணுவத்தினர் 4 பேரை தாக்கி காயப்படுத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டிய நிலையில், நேற்றைய தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
