Skip to content

2026 சட்டப்பேரவைத் தேர்தல்; அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்! ஈபிஎஸ் அதிரடி முழக்கம்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான களம் முன்கூட்டியே அனல்பறக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகம், தேர்தல் அறிக்கை தயாரித்தல், வெற்றிபெறுவதற்கான தொகுதிகளை அடையாளம் காணுதல் போன்ற பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை

தமிழ்நாடு பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (23.12.2025) சென்னை வந்தார். அவர் தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயலை சந்தித்தார். சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசியல் நிலவரம்; பியூஷ் கோயல்-இபிஎஸ் ஆலோசனை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி,”நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை

சந்தித்துப் பேசினேன்; இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்; 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம் இபிஎஸ் கூறினார்.

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவோம்: எடப்பாடி பழனிசாமி

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *