Skip to content

மம்தா பானர்ஜி,காதர் மொய்தீன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

சென்னை,ஜன.05; திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி இன்று (05.01.2026) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் மம்தாவின் பங்கு

இந்திய அரசியலில் துணிச்சலான பெண் தலைவர்களில் ஒருவராகத் திகழும் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரை ஒரு “சளைக்காத போராட்ட வீராங்கனை” என்று புகழ்ந்துள்ளார்.

“நாட்டின் ஜனநாயக மாண்புகளைக் காக்க இணைந்து செயல்படுவோம்”

“மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; அவர் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் சேவையைத் தொடர வாழ்த்துகிறேன்; நாட்டின் ஜனநாயக மாண்புகளைக் காக்க நாம் இணைந்து செயல்படுவோம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் மம்தா பானர்ஜி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

கே.எம்.காதர் மொய்தீனுக்கும் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இதேபோன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் காதர் மொய்தீன்: அரசியல் பயணமும் ஆளுமையும்

பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் தமிழ்நாடு அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். சமூக நல்லிணக்கத்திற்காகவும், சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையிலான பல ஆண்டுகால நட்புக்கும், கூட்டணிக்கும் ஒரு முக்கிய பாலமாக அவர் விளங்குகிறார்.

“காதர் மொய்தீனின் அரசியல் முதிர்ச்சி சமூகத்திற்கு தேவை”

பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பல்லாண்டு காலம் உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அவரது அரசியல் முதிர்ச்சியும், வழிகாட்டுதலும் சமூகத்திற்குத் தேவை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *