சென்னை,ஜன.12; மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகளின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சப்போவதில்லை-மீண்டும் மும்பைக்கு வருவேன் – முடிந்ததை செய்து பாருங்கள் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
மும்பை சர்வதேச நகரம் எனப்பேசியதால் கடும் எதிர்ப்பு
மகாராஷ்டிராவில் வரும் 15ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த வெள்ளிக்கிழமை அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மும்பை மாநகரம் மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது அல்ல என்றும் அது சர்வதேச நகரம் என்றும் அவர் பேசி இருந்தார். அவரது இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
அண்ணாமலையை தாக்குவோம் என எதிர்க்கட்சிகள் ஆவேசம்
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனா, ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் கண்டன
கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதப்பட்டிருந்தது.
“வேலை இல்லாதவர்கள் என்ன வசைபாடுகின்றனர்”
இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ராஜ் தாக்கரே போன்றவர்கள் மேடை போட்டு திட்டும் அளவிற்கு நான் வளர்ந்துள்ளேன்; வேலை இல்லாமல் சிலர் அங்கிருந்து என்னை பற்றி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர், மிரட்டிக் கொண்டிருக்கின்றனர்; என் தாய், தந்தையர் ஆடு மாடு மேய்ப்பவர்கள்; அவர்களின் மகனான எனனை மும்பையில் கூட்டம் போட்டு திட்டுகின்றனர்; ஒரு விவசாயி மகனாகிய என்னை மிரட்டுகின்றனர்; யார் மிரட்டினாலும் நான நான் மும்பை செல்வதை தடுக்க முடியாது. நான் மும்பைக்கு வருவேன், வரத்தான் போகிறேன். முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம் என்று மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகளுக்கு அண்ணாமலை சவால் விடுத்திருக்கிறார்.
