Skip to content

பெண்களுக்கு ஜாக்பாட்! மகளிர் உரிமைத்தொகை 50% உயர்வு? – அறிவிப்பு எப்போது வெளியாகும்?

சென்னை,ஜன.12; தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஒரு முக்கிய மாற்றம் வரப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்; ஒரு பார்வை

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியாக ‘மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் அமைந்தது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாக அந்தத் திட்டம் நடைமுறைக்கு வராததால், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கின.

அதன்பின்னர் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது.

இரண்டாம் கட்ட விரிவாக்கம்

உரிமைத்தொகை கிடைக்காத தகுதியுள்ள பெண்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், புதிதாக விண்ணப்பித்தவர்களில் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

50 சதவீதம் உயர்கிறதா உரிமைத்தொகை?

தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ரூ.1,500 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதாவது 50 சதவீத உயர்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் அண்மையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “விரைவில் பெண்களுக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது” என்று சூசகமாகத் தெரிவித்தார். இந்த ‘இனிப்பான செய்தி’ என்பது உரிமைத்தொகை உயர்வுதான் என அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது.

அறிவிப்பு எப்போது வெளியாகும்?

இந்த 50 சதவீத உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ள ஆளுநர் உரையில் இது இடம்பெறலாம்.

அல்லது, தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்படலாம்.

அல்லது, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற வாய்ப்புள்ளது.

அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கும் பெண்கள்

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், தற்போது தொகை உயர்த்தப்படுவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய பெண்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும். அரசின் இந்த அதிரடி அறிவிப்பிற்காகத் தமிழ்நாட்டுப் பெண்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *