Skip to content

சிபிஐ விசாரணை நிறைவு: இன்று சென்னை திரும்புகிறார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

டெல்லி,ஜன.13; கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் இன்று (13.01.2026) சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெகவின் மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில்
சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கட்சித் தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று காலை (13.01.2026) தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், அங்குள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.

7 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணை

சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் சுமார் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் முக்கியமாக:

கரூரில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது யார்?

கூட்ட நெரிசலைக் குறைக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டதா? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணைக்குப் பின், வாக்குமூலத்தில் கையெழுத்திடுவதற்காகச் சற்று நேரம் காத்திருந்த விஜய், பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இன்றைய திட்டம்; சென்னை திரும்புதல்

இன்று (13.01.2026) மீண்டும் விசாரண நடைபெறவிருந்த நிலையில், விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, விஜய் இன்று (ஜனவரி 12) மாலைக்குள் சென்னை திரும்புவார் என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு சிபிஐ விசாரணை மிகப்பெரிய சவால்

அரசியல் களத்தில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்க்கு, இந்த சிபிஐ விசாரணை பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. எனினும், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க அவர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு இந்த விசாரணையின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் Kபார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *