Skip to content

திருச்சி கிழக்கு; தொகுதியை மீண்டும் குறிவைக்கிறாரா அன்பில் மகேஷ்? காங்கிரசுடன்  கூட்டணி  முறிந்தால் நிலை மாறுமா?

திருச்சி கிழக்கு தொகுதி (எண் – 141)

1951 முதல் திருச்சி – 1 என அழைக்கப்பட்டு வந்த இத்தொகுதி, 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் திருச்சி கிழக்குத் தொகுதி என பெயர் மாற்றப்பட்டது.

இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக இருமுறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இங்கு கிறிஸ்தவ வெள்ளாளர், யாதவர், பிள்ளைமார், பட்டியலினத்தவர், இஸ்லாமியர் என  பல்வேறு சமூகத்தினர் வாழ்கின்றனர்.

திமுகவின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மீண்டும் சீட் கேட்கிறார்.

தொகுதி மாறி திருச்சி கிழக்கில் நிற்க அன்பில் மகேஷ் ஆர்வமா?

இவர் தவிர, அமைச்சர் அன்பில் மகேஷ், கிழக்கு மாநகரச் செயலாளர் மதியழகன், திருச்சி மேயர் அன்பழகன் ஆகியோரும் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

கூட்டணிக் கட்சியான காங்கிரசில், முன்னாள் எம்பி திருநாவுக்கரசர், முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோரும் சீட் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுகவில் மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசனுக்குத்தான் வாய்ப்பு எனப் பேசுகின்றனர்.

2021 தேர்தலில், இனிகோ இருதயராஜ் 94,000 வாக்குகளையும், அதிமுவின் வெல்லமண்டி நடராஜன் 41,000 வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியின் இரா. பிரபுவுக்கு 14,000 வாக்குகள் கிடைத்தது.

தவெகவின் வருகையால் பிற கட்சிகளின் வாக்குகள் சிதறுமா?

தவெகவுக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் முதல் தலைமுறையினரின் வாக்குகள் கிடைக்கும் என நம்பப்படுவதால், பிற கட்சிகளுக்கான வாக்குகள் குறையும் எனத் தெரிகிறது.

இருப்பினும், கட்சியின் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு, சிறுபான்மையினரின் வாக்குகள் ஆகிய காரணங்களால் இத்தொகுதியில் திமுக முந்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *