Skip to content

மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்காக எதுவும் செய்யப்படவில்லை: கார்கே! பட்ஜெட் மந்தமானது என ப.சிதம்பரம் விமர்சனம்!

டெல்லி,பிப்.02; மத்​திய அரசின் பட்ஜெட்டில் ஏழைகளுக்​காக எது​வுமே செய்​யப்​பட​வில்லை என்று காங்​கிரஸ் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் மல்லிகார்ஜுன கார்கே விமர்​சனம் செய்துள்ளார். 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான பட்​ஜெட்டை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளுமன்றத்​தில் நேற்று தாக்​கல் செய்​தார்.

மோடி அரசிடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன: கார்கே

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கார்கே,பிரதமர் மோடியின் மத்​திய அரசிடம் யோசனை​கள் தீர்ந்​து​விட்​டன. பட்​ஜெட் 2026-27 இந்​தி​யா​வின் பல பொருளாதார, சமூக மற்​றும் அரசி​யல் சவால்​களுக்கு ஒரு தீர்​வை​யும் வழங்​க​வில்​லை. ஏழை மக்​களுக்​காக பட்ஜெட்டில் எது​வுமே செய்​யப்​பட​வில்​லை என்று கார்கே விமர்சித்தார்.

மத்திய அரசின் பட்ஜெட் மந்தமான நிதிநிலை அறிக்கையாக இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவுமே இல்லை: ப.சிதம்பரம்

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், “வேலை வாய்ப்​பின்​மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, நாட்​டின் முன் எழுந்​துள்ள பல சவால்​களை மத்​திய நிதி அமைச்​சர் கவனத்​தில் கொள்ளவில்​லை. ரூபா​யின் மதிப்பை வலுப்​படுத்த எந்த நடவடிக்கை​யும் பட்​ஜெட்​டில் குறிப்​பிடப்​பட​வில்​லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்​கிய​மான துறை​களுக்​கான ஒதுக்​கீடு மற்​றும் செலவினம் குறைந்​துள்​ளது; மத்​திய அரசின் மூலதனச் செலவு குறைந்​துள்​ளது; ஜல்​ஜீவன் திட்​டத்​துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.67 ஆயிரம் கோடி​யில் இருந்து ரூ.17 ஆயிரம் கோடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது; வேலை வாய்ப்பு நிலவரங்​கள் கவலை அளிப்​ப​தாகவே உள்​ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் மந்தமானது என்றே சொல்லலாம்: சிதம்பரம்

நிதிப்​பற்​றாக்​குறை சொற்ப அளவாக 0.1 சதவீதம் மட்​டுமே குறைக்​கப்​பட்டு உள்​ளது. பொருளா​தார வியூ​கப்​படி பார்த்தால் மத்​திய பட்​ஜெட் மிகப்​பெரிய தோல்வி அடைந்துள்​ளது. எதிர்​பார்ப்​பு​களுக்கு சற்​றும் ஈடுகொடுக்காத மந்​த​மான பட்​ஜெட்​டாக இருக்​கிறது. இதை மந்​த​மான பட்​ஜெட் என்றே சொல்​லலாம் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

“வீட்டு சேமிப்பு வீழ்ச்சியடைவது பற்றி எதுவுமே சொல்லவில்லை”

நாட்​டின் உண்​மை​யான நெருக்​கடி விஷ​யங்​களுக்கு பட்ஜெட்டில் எந்​தப் பதி​லும் இல்​லை. வேலை​யில்​லாத இளைஞர்​கள், உற்​பத்தி வீழ்ச்​சி, முதலீட்​டாளர்​கள் மூலதனத்தை திரும்​பப் பெறு​தல், வீட்டு சேமிப்பு வீழ்ச்​சி​யடைதல், துயரத்​தில் இருக்​கும் விவ​சா​யிகள் உள்​ளிட்ட நாட்​டின் உண்​மை​யான சவால்​களை மத்​திய அரசு கவனிக்​க​வில்​லை என்று சிதம்பரம் தெரி​வித்​தார்.

மாநில வளர்ச்சிகளுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை: சசிதரூர்

முன்​னாள் மத்​திய அமைச்​சர் சசி தரூர் கூறும்​போது, “நாட்டில் தலை​விரித்​தாடி வரும் வேலை​வாய்ப்​பின்மை பிரச்​சினை குறித்து பட்​ஜெட்​டில் எந்​த​வித பதி​லும் இல்லை. நடுத்தர வர்க்​கத்​தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்​சினை​கள் குறித்து பட்​ஜெட்​டில் எந்தவித அறி​விப்​பும் இல்​லை. மேலும் மாநில வளர்ச்​சிகளுக்​காக பட்​ஜெட்​டில் ஒன்​றுமே செய்​யப்​பட​வில்​லை” என்​று குறை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *