சென்னை,மார்ச்.31; தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) அமலில் உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது கட்சியின் பரப்புரை அல்லது பொது நிகழ்வின் போது விதிகளை மீறியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதியில் நேற்று (மார்ச் 30, திங்கள்) அவர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அப்பகுதியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தை நோக்கி பரப்புரை வாகனத்தில் சென்றார்.
அப்போது வழிநெடுகிலும் நின்றிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் விஜய்க்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பெரம்பூர், கொளத்தூரில் அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.
விஜய்யைக் காணக் கூடியவர்கள் சாலை தடுப்புகளை தாண்டினர்
விஜய்யைப் பார்ப்பதற்கும், அவரது பேச்சைக் கேட்கவும் ஆண்களும், பெண்களும் பெருமளவில் திரண்டனர். அவர்களில் பலர் சாலைத் தடுப்புகளை தாண்டிக் குதித்தனர்.
இதனையடுத்து விஜய்யின் பரப்புரை வாகனம் 500 மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டது. இளைஞர்களின் கூட்டத்திற்கு மத்தியில் விஜய் தனது முதல் பரப்புரையைத் தொடங்கினார்.
5 ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி; ஆனால், 30 ஒலிபெருக்கிகள்..
இந்நிலையில், சென்னை கொளத்தூரில் பரப்புரையின்போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் மீது விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5 ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரியிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஓலிபெருக்கிகளை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மேலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்களை திரட்டியதாகவும், பரப்புரையின் போது ஆம்புலன்ஸ் பாதைய மறைத்ததாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரி அளித்த புகாரின் அடிப்பயையில், விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் பெரவள்ளூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவ் செய்துள்ளனர்.
