Skip to content

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?

சென்னை,ஏப்.03; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் களம் பல்வேறு கூட்டணிகளால் பிளவுபட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஒரு வழியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய முகங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்

ஆவடி: ராஜசிம்ம மகிந்திரா

மயிலாப்பூர்: தமிழிசை சௌந்தரராஜன்

தளி: மருத்துவர் நாகேஷ் குமார்

திருவண்ணாமலை: சி.ஏழுமலை

மொடக்குறிச்சி: கிருத்திகா சிவகுமார்

உதகமண்டலம்: போஜராஜன்

ராசிபுரம் (தனி): மருத்துவர் எஸ்.டி.பிரபாகர்

அவினாசி (தனி): எல்.முருகன்

திருப்பூர்: எஸ்.தங்கராஜ்

கோவை வடக்கு: வானதி சீனிவாசன்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம்.முருகானந்தம்

கந்தர்வகோட்டை: சி.உதயகுமார்

புதுக்கோட்டை: என்.ராமச்சந்திரன்

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர்: கே.சி.திருமாறன்

மானாமதுரை (தனி): வி.பாலகணபதி

மதுரை தெற்கு: ராம சீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: கே.நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (தனி): ஆனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி.பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர்.காந்தி

குளச்சல்: டி.சிவகுமார்

பத்மநாபபுரம்: பி.ரமேஷ்

விளவங்கோடு: எஸ்.விஜயதரணி

பாஜக-வின் தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிக் கணக்கு

இந்த முறை தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தவும், தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யவும் வலுவான வேட்பாளர்களை கட்சித் தலைமை களம் இறக்கியுள்ளது.

2026 தேர்தல் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். பாஜக வெளியிட்டுள்ள இந்த வேட்பாளர் பட்டியல் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *