Skip to content

கட்சித் தலைமையின் அனுமதிபெற்றே விஜய்யை சந்தித்தேன்; பிரவீன் சக்கரவர்த்தியின் புதிய குண்டால் கலகலக்கும் திமுக கூட்டணி!

சென்னை,ஏப்.10; தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யைச் சந்தித்தது. இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி தற்போது வீசியுள்ள புதிய குண்டு திமுக கூட்டணியிலும் தமிழ்நாடு தேர்தல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்-பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு பேசுபொருளாகி அடங்கியது

காங்​கிரஸில் ராகுலுக்கு நெருக்​க​மான​வ​ராக அறியப்​படும் பிர​வீன் சக்​கர​வர்த்தி, சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் சில நாட்களுக்குப் பின்னர் அடங்கியது.

தற்போது தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வரும் நிலையில், விஜய் உடனான சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி வீசியிருக்கும் புதிய குண்டு திமுக கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

தலைமையின் அனுமதி பெற்றே விஜய்யை சந்தித்ததாக பேட்டி

விஜய் உடனான சந்திப்பு குறித்த பல்வேறு யூகங்களுக்குப் பிறகு, தற்போது பிரவீன் சக்கரவர்த்தி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்​றுக்கு அவர் அளித்த பேட்​டி​யில், சில மாதங்​களுக்கு முன் விஜய்யை தனிப்​பட்ட முறை​யில் நான் சந்​திக்​க​வில்​லை; கட்​சித் தலைமை அனு​ம​தி​யுடன்​தான் சந்​தித்​தேன்; கடந்த ஆறு மாதங்​களில் நான் செய்த அனைத்​தும், காங்​கிரஸ் கட்​சித் தலை​மை​யின் அறி​வுரை, ஒப்​புதல் மற்​றும் அனு​ம​தி​யுடன் தான் நடந்​தன என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

“நான் விஜய்யைச் சந்தித்தது ரகசியமானது அல்ல. காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமையிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே அவரைச் சந்தித்தேன்” என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் தாக்கம்

தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பதை காங்கிரஸ் கவனித்து வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி தனது பேட்டியில், “விஜய் இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக மாறியுள்ளார். அவரது பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தை வெறும் சினிமா ரசிகர்களாகப் பார்க்க முடியாது; அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி குறித்த யூகங்கள்

தமி​ழ்நாட்டில் காங்​கிரஸுக்கு தன் பலமே தெரி​யவில்லை; காங்​கிரஸ் புத்​து​யிர் பெற இந்த முறை ஒரு வாய்ப்பை பயன்​படுத்த நினைத்தோம்; தமி​ழ்நாட்டில் கட்​சியை வலுப்​படுத்த வேண்​டும்; குறிப்​பாக ராகுல் காந்தி மற்​றும் அவரது குடும்​பத்​தினர் தமி​ழ்நாட்டில் நன்மதிப்​பைப் பெற்​றுள்​ளனர்; இப்​படிப்​பட்ட ஒரு மாநிலத்​தில் ஒரு தேசி​யக் கட்சி தன்னை வலுப்​படுத்​திக் கொள்ள ஏன் கடுமை​யாக உழைக்​கக் கூடாது? அப்​படி​யிருக்​கும்​போது ஒரு காங்​கிரஸ்​ கட்​சித் தொண்​டரோ அல்​லது தலை​வரோ அமைச்​ச​ராகி அதி​காரத்​தைப் பகிர்ந்​து​கொள்ள ஏன் ஆசைப்பட மாட்​டார்? நியாயமில்​லாத எதை​யும் நாங்​கள் கேட்​க​வில்​லை என்றும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

“வரும் தேர்தல் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும்”

காங்​கிரஸுக்கு அதிக சீட் கிடைக்​காத​தால் கட்​சித் தொண்​டர்​கள் அதிர்ச்​சி​யில் உள்​ளனர்; அதிக இடங்​கள் கிடைக்​காத பட்​சத்​தில் இந்​தப் பிரச்​னை​களுக்​குத் தீர்வு இருப்​ப​தாக எனக்​குத் தெரிய​வில்​லை; மேலும் வரும் தேர்​தல் ஒரு கடுமை​யான போட்டி நிறைந்த தேர்​தலாக இருக்​கும்; இதில் தவெக ஆளுங்​கட்​சி​யின் வாக்​கு​களைப் பிரிக்​கும் என்​பது உண்மை என்றும் பிரவீன் சக்கரவர்த்தி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என நம்பும் தேசியக் கட்சிகள்

தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருவதாக தேசியக் கட்சிகளும் நம்புகின்றன. பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த விளக்கம், காங்கிரஸ் கட்சியின் மேலிடம் விஜய்யுடன் ஒரு சுமுகமான உறவைப் பேண விரும்புவதையே காட்டுகிறது. இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில், பிரவீன் சக்கரவர்த்தியின் தகவல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *