Skip to content

அரசியலில் இருக்கவே தகுதி இல்லாதவர் செந்தில் பாலாஜி: அண்ணாமலை கடும் தாக்கு!

கோவை,ஏப்.11; சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகளின் பரப்புரை வேகமெடுத்துள்ளது.

அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனனை ஆதரித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 10, சனிக்கிழமை) பரப்புரையில் ஈடுபட்டார்.

பின்னர் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி?

“கரூரில் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து பயந்துபோய், செந்தில் பாலாஜி கோவைக்கு ஓடி வந்திருக்கிறார்” என்று அண்ணாமலை சாடினார்.

செந்தில் பாலாஜிக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, அவர் ஊழல் புகாரில் சிக்கி சுமார் 477 நாட்கள் சிறையில் இருந்தவர்;

ஒவ்வொரு தேர்தலின் போதும் தோல்வி பயத்தால் தொகுதி மாறி மாறி போட்டியிடும் போக்கு.

அரசியல் நிலைத்தன்மையின்மை: இதுவரை 5 கட்சிகளுக்கு மேல் மாறி, ‘அரைவேக்காட்டு’ அரசியல் செய்து வருவது.

பொய் வாக்குறுதிகள்: தேர்தலின் போது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது.

கோவை மக்களின் முடிவு என்ன?

“அரசியலில் இருக்கவே தகுதி இல்லாத செந்தில் பாலாஜியைப் படுதோல்வி அடையச் செய்ய கோவை தெற்கு தொகுதி மக்கள் தயாராக உள்ளனர்” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மகத்தான வெற்றி பெறுவார் என்றும் அண்ணாமலை உறுதிபடக் கூறினார்.

அண்ணாமலையின் கருத்தால் அரிசியலில் பெரும் பரபரப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அண்ணாமலையின் இந்த அதிரடி கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை முன்வைத்து பாஜக களம் காணும் நிலையில், திமுக இதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *