சென்னை,ஏப்.13; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் நடந்தது என்ன?
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றி ஆளும் கட்சியினர் தங்களது கட்சி ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட கைக்குழந்தையுடன் இருந்த மற்றொரு பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் ஆளும் கட்சியினர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் கடுமையான கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விஜய், “மகளிர் மீதான இந்தத் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றிச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதியை மீறியதோடு, கேள்வி கேட்டவர்களைத் தாக்கியிருப்பது அராஜகத்தின் உச்சம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விசில் புரட்சியால் இனி தங்களால் எதையும் செய்ய முடியாது என்ற கோபத்தில் சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விஜய்யின் கடுமையான கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விஜய், “மகளிர் மீதான இந்தத் தாக்குதல் ன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றிச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதியை மீறியதோடு, கேள்வி கேட்டவர்களைத் தாக்கியிருப்பது அராஜகத்தின் உச்சம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விசில் புரட்சியால் இனி தங்களால் எதையும் செய்ய முடியாது என்ற கோபத்தில் சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்; வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றும் அவர் சாடியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
இந்தச் சூழலில், காவல் துறை உடனடியாகத் தலையிட்டு அராஜகத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும், கண்காணிப்புப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் விஜய் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் வன்முறைக்கும் அராஜகத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விஜய் எழுப்பியுள்ள இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தே, வரும் நாட்களில் தேர்தல் களம் எவ்வளவு அமைதியாக இருக்கும் என்பது அமையும்.
