Skip to content

முதலமைச்சராக பதவியிலிருந்தபோது தோற்றவர்கள் பட்டியலில், மு.க.ஸ்டாலின்! இதற்கு முன்னர் யாரெல்லாம்..?

முதலமைச்சராக பதவியிலிருந்தபோது அல்லது தேர்தலில் போட்டியிட்டபோது தோல்வியடைந்த தலைவர்கள் பட்டியலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறு தோற்றவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

1960-களின் மத்தியில், கர்மவீரர் காமராஜர் கட்சிப்பணிகளுக்கு சென்றதால், பக்தவத்சலம் முதலமைச்சரானார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

எம்ஜிஆர் மறைவிற்குப் பின்னர் காலச் சூழலால் முதலமைச்சரானவர், அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன். அதன்பிறகு 1988-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜானகி ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அவர் முதன்முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே தோல்வியைத் தழுவினார்.

1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இதில் ஜெயலலிதா 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதன்பிறகு, முதலமைச்சராக இருந்த திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், 2026 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,531 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *