உலக நாடுகளுக்கு உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை; சில பகுதிகளில் கடும் வறட்சியும், சில இடங்களில் பெருவெள்ளமும் ஏற்பட வாய்ப்பு.
அதிதீவிர எல் நினோ நிகழ்வு 2027 பிப்ரவரி வரை 100% நீடிக்கும் என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றங்கள் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் சில நாடுகளில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதே நேரத்தில் சில பகுதிகளில் கனமழை மற்றும் கடும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகால வானிலை கண்காணிப்பு வரலாற்றில், இவ்வளவு உறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர எல் நினோ நீடிக்கும் பட்சத்தில், உலகின் பல்வேறு நாடுகளின் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
இதனால் வறட்சி மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
