சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்று அதிமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தொிவித்துள்ளார். சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் இன்று (10.12.2025) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர், தீய சக்தி திமுகவை தமிழ்நாட்டைவிட்டு அகற்ற எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார் என்று பேசினார்.
அதிமுகவை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது
அதன்பிறகு, பல்வேறு சோதனைகளைத் தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார் – அமைதி, வளம், வளர்ச்சி என்ற ஜெயலலிதாவின் கொள்கையே நமக்கு தாரக மந்திரம் – அன்றைக்கு ஆட்சியில் இருந்தபோதும், இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நம்மை விமர்சனம் செய்கின்றனர் என்று குறிப்பிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது – நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தனர் -அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டுப்பார்க்க முடியவில்லை என்று இபிஎஸ் தெரிவித்தார்.
தேர்தலில் 100% வெற்றி பெறுவோம் என உறுதி
வரும் தேர்தலில் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவோம்-மீண்டும் அதிமுக ஆட்சிஅமையும் -அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று அவர் சூளுரைத்தார். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்-தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு மாதிரி வாக்களிப்பார்கள் – சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஒரு மாதிரி வாக்களிப்பார்கள் என்றும் அவர் பேசினார்.
ரூ.1,000 வாங்கிக்கொள்ளுங்கள், அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை தற்போது நிறுத்திவிட்டனர் – அதுதான் திமுகவின் சாதனை -பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததுகூட, சட்டப்பேரவையில் அதிமுக வலியுறுத்திய பிறகுதான் நடந்தது என்றும் அவர் கூறினார். மேலும் 30 லட்சம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்திருக்கின்றனர் – எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் – ஆனால், அதிமுகவுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
