Skip to content

அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; முன்னாள் அமைச்சர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு!

சென்னை,மார்ச்.27; தமிழ்நாடு அரசியல் களம் தற்போது தேர்தல் ஜூரத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் சூழலில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 66 தொகுதிகள் இரு தினங்களுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 168 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

2ஆம் கட்டமாக 127 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக சார்பில் முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு இரு தினங்களுக்கு முன்னர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பட்டியல் இன்று (மார்ச் 27, 2026) வெளியாகி உள்ளது.

அதன்படி, திருத்தணி -கோ. அரி, திருவள்ளூர் பி.வி. ரமணா, மாதவரம் -வி. மூர்த்தி, திருவொற்றியூர் கே. குப்பன், தாம்பரம் -சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், செங்கல்பட்டு – எம். கஜா (எ) கஜேந்திரன், மதுராந்தகம் – மரகதம் குமரலேல், திருப்பூர் – எம்.எஸ்.எம். ஆனந்தன், கோவை தெற்கு- அம்மன் கே. அர்ச்சுணன், கிணத்துக்கடவு – செ. தாமோதரன், பொள்ளாச்சி-முனைவர் கே. ஜெயராமன், உடுமலைப்பேட்டை- கே. ராதாகிருஷ்ணன், அரவக்குறிச்சி -கே. செல்வகுமார், செய்யார்- முக்கூர் என். சுப்பிரமணியன், தாராபுரம் -பி. சத்தியபாமா, அந்தியூர் – பி.ஹரிபாஸ்கர், திருமயம்-பி.கே. வைரமுத்து, சிவகங்கை-பி.ஆர். செந்தில்நாதன், மேலூர்-பெரியபுள்ளான், மதுரை வடக்கு- மருத்துவர் பி. சரவணன், போடிநாயக்கனூர்-வி.டி. நாராயணசாமி, பெரியகுளம்-எஸ்.டி.கே. ஜக்கையன், திருநேல்வேலி -தச்சை என். கணேசராஜா, கன்னியாகுமரி- என். தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக அதிமுகவில் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.

அதிமுகவின் தேர்தல் வியூகம்

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக, இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளது.

இதுவரை 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

மொத்தம் 150 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் நிலவும் இந்த மும்முனை அல்லது பலமுனைப் போட்டியில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *