இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என நம்புவதாக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் முதல் படையான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது இந்துக்களின் பாரம்பரிய வழக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். தங்களின் நம்பிக்கையையும் சடங்குகளையும் செய்வதற்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ளது சோகமானதாகும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளா்ா. அமைதியான சடங்குகளைக் கூட இந்து பக்தர்களால் செய்ய முடியவில்லை – உண்மையிலேயே அவர்களுக்கு அரசமைப்பு சாசன நீதி கிடைத்துள்ளதா? என்றும் அவர் வினவியுள்ளார். தீபத்தூணில் தீபமேற்ற நமக்கு உரிமை உள்ளது என்பதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளதாக பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். எந்த சமய விழாக்களையேனும் ஒரு வாரம் தள்ளிப்போட முடியுமா? குறிப்பிட்ட ஒரு நாளில் நடக்க வேண்டிய புனித திருவிழாவை, மற்றொரு நாளுக்கு மாற்ற முடியுமா? முடியாது. காரணம், சமயம் சார்ந்த காலநேரமும் ஒவ்வொரு சமய நாள்காட்டிகளும் மாற்றப்பட முடியாதவை என்றும் ஆந்திரா துணை முதலமைச்சர் கூறியுள்ளார். இந்துக்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணமே அதற்கு காரணமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தங்களின் நம்பிக்கையையும் சடங்குகளையும் செய்வதற்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ளது சோகமானதாகும் -முரணானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டப்போராடத்தில் வென்ற பிறகும், சொந்த நாட்டில் சொந்த இடத்தில் தங்களது எளிய – அமைதியான சடங்குகளைக் கூட இந்து பக்தர்களால் செய்ய முடியவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அரசமைப்பு சாசன நீதி கிடைத்துள்ளதா? என பவன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்துக்கள் விழித்தெழும் நாள் வரும்; பவன் கல்யாண்
