Skip to content

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; நாளை முதல் 29ஆம் தேதி வரை கருத்துக் கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

டெல்லி,ஏப்.08; கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலங்களில் நாளை (ஏப்ரல் 9, வியாழன்) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இவற்றுடன் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 9, வியாழன்) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு வரும் 23 மற்றும் 29ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

5 மாநிலத் தேர்தல்கள்; மே 4ஆம் தேதி முடிவுகள்

இந்த 5 மாநிலத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஏப்ரல் 9 -29 மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை

ஐந்து மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கவிருக்கும் சூழலில், நாளை (ஏப்ரல் 9ஆம் தேதி) காலை 7 மணி முதல் வரும் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக் கணிப்புகளை நடத்தவோ அல்லது வெளியிடவோ தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 9ஆம் தேதி) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கொள்ளவோ அல்லது அவற்றை வெளியிடவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகளை நடத்த அல்லது வெளியிட தடை

இந்த காலக்கட்டத்தில் கருத்துக் கணிப்புகளை நடத்துவது அல்லது அவற்றை வெளியிடுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 126-ஏ பிரிவை மீறுவதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு 2 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *