Skip to content

சதமடித்ததும் கோலி செய்த செயல்; மகிழ்ச்சியை பகிர்ந்த மனைவி

ராய்ப்பூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 53ஆவது சதத்தை பதிவு செய்த பின்னர் விராட் கோலி தனது திருமண சங்கிலியை முத்தமிட்ட காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், கோலி அபாரமாக விளையாடி சதம் கண்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் தொடர்ச்சியாக அடித்துள்ள இரண்டாவது சதம் இதுவாகும். கோலியின்  ஆட்டத்தை காண ஆர்வத்துடன் வந்த ரசிகர்களுக்கு அவர் விருந்து படைக்கத் தவறவில்லை. சதம் விளாசிய உடன் கோலி தனது திருமண மோதிரத்தை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்கு அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது மகிழ்ச்சியை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பதிலிட்டார். இந்தப்பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *