5 மாதங்களில் 1.95 லட்சம் பதிவுகள் நீக்கம்?
சமூக ஊடகப் பதிவுகளை நீக்க உத்தரவு பிறப்பித்ததாக ஒன்றிய அரசு தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2026 மார்ச் முதல் ஜூலை வரையிலான 5 மாதங்களில் மட்டும் சுமார் 1.95 லட்சம் சமூக ஊடகப் பதிவுகளை நீக்க மெட்டா, யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி, சராசரியாக 68 வினாடிகளுக்கு ஒரு சமூக ஊடகப் பதிவை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர் போராட்டத்தை முடக்க உத்தரவா?
டெல்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தை முடக்குவதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு சமூக ஊடகப் பதிவுகளை நீக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா, யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களில் பதிவிடப்பட்ட உள்ளடக்கங்களை அகற்றுமாறு அரசு தரப்பில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தம்?
சமூக ஊடகங்களில் பதிவுகளை நீக்குவதற்கான அரசின் உத்தரவுகள் அதிகரித்திருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. குறிப்பாக, மாணவர் போராட்டம் தொடர்பான பதிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்ற விவாதமும் உருவாகியுள்ளது.
எனினும், பதிவுகள் நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள், எந்த வகையான பதிவுகள் அகற்றப்பட்டன மற்றும் உத்தரவுகளின் முழுமையான விவரங்கள் தொடர்பாக தெளிவான தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.
