அதிக திரை நேரம் கல்வி மற்றும் மொழித் திறனை பாதிக்கும் என எச்சரிக்கை
சிறார் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தினால் அவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் பாதிக்கப்படலாம் என சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக இளம் வயதிலேயே ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தத் தொடங்கும் குழந்தைகளுக்கு அதிகப்படியான திரை நேரம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
நினைவாற்றல், கல்வித் திறன் பாதிப்பு
சிறார்கள் நீண்ட நேரம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் பிற டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தும்போது, அவர்களின் கற்றல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக, நினைவாற்றல் குறைதல், கல்வித் திறன் பாதிப்பு மற்றும் கற்றல் திறன் குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழித் திறனிலும் பாதிப்பு?
அதிகப்படியான திரை நேரம் குழந்தைகளின் மொழி வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என ஆய்வு எச்சரிக்கிறது. குழந்தைகள் பெற்றோர் மற்றும் சுற்றியுள்ளவர்களுடன் நேரடியாக பேசுவதற்கும், விளையாடுவதற்கும் செலவிடும் நேரம் குறைவது அவர்களின் கற்றல் மற்றும் மொழி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, சிறார்களின் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை பெற்றோர் கண்காணிப்பதுடன், அவர்களுக்கு தேவையான அளவில் மட்டுமே திரை நேரத்தை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
