Skip to content

சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய விருது; பெரும் ஊக்கமாக அமையும் என ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரியான (Supriya Sahu) சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்’ (பூமியின் வெற்றியாளர்கள்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர், லக்னோ பல்கலைக்கழகத்தில் தாவரவியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் ஐ.ஏ.எஸ். முடித்துவிட்டு, கூடுதல் ஆட்சியராக வேலூர் மாவட்டத்திலும் மேலாண்மை இயக்குநராக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்திலும் தனது பணியைத் தொடங்கினார்.

யற்கை, விலங்குகள் மீது பேரார்வம் கொண்டவர்

பின்னர் மாநிலப் பொறுப்பிருந்து மத்திய அரசுப் பொறுப்பிற்கு மாறி இணைச் செயலராக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பணியாற்றினார். இயற்கையின் மீதும், விலங்குகள், குறிப்பாக யானைகள் மீதும் சிறு வயது முதலே அதிக ஆர்வம் கொண்ட சுப்ரியா சாகு, பொது ஊழியராக தனது 30 ஆண்டுகால வாழ்க்கையில், வளமான பல்லுயிர் பெருக்கத்தின் மீது ஈர்ப்பை வளர்த்துக் கொண்டவர். விலங்குகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதை தடுப்பதற்கு அளப்பரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார்.

ருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க தீவிரம்

நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கமாகக் கொண்ட “ஆபரேஷன் ப்ளூ மவுன்டைன்” என்ற பரப்புரையை தொடங்கினார். தமிழ்நாட்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதற்கும் 65 புதிய காப்புக் காடுகளை நிறுவுவதற்கும் அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவரது தலைமையின் கீழ், மாநிலம் அதன் சதுப்புநிலப் பரப்பை இரட்டிப்பாக்கியுள்ளது, அதன் ஈரநிலங்களை 1 இலிருந்து 20 ஆக விரிவுபடுத்தியுள்ளது. இப்படி கணக்கிடலங்கா ஆகச்சிறந்த பணிகளை ஆற்றியுள்ள சுப்ரியா சாகுவுக்கு கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ (பூமியின் வெற்றியாளர்கள்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரியாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சுப்ரியா சாகு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக விருது பெற்ற சுப்ரியா சாகுவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *