காசோலை மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமாருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சரத்குமார் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காசோலை மோசடி தொடர்பாக சென்னை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கடன்களை அடைப்பதற்காக 2025ஆம் ஆண்டு சரத்குமார் தன்னிடம் ரூ.2 கோடி பெற்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான செக் மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சரத்குமாருக்கு சம்மன் பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த செக் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரத்குமார் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.
