சென்னை,மே.06; தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஆளுநர் அர்லேகரிடம் வழங்கினார்.
வென்ற வேட்பாளர்களின் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிப்பு
பட்டியல் சமர்ப்பிப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து, 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வழங்கினார்.
அரசு அமைக்கும் நடைமுறை: தேர்தல் ஆணையத்தின் இந்தப் பட்டியல் சமர்ப்பிப்பு, புதிய அரசு அமைப்பதற்கான முதல் சட்டப்பூர்வ நடவடிக்கையாகக் பார்க்கப்படுகிறது.
ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார், விஜய்
இதனிடையே, தவெக தலைவர் விஜய் இன்று (மே 6, 2026) கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அவரிடம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கிய விஜய், தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.
இதன் தொடர்ச்சியாக, ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் நாளை (மே 7, 2026) பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்று, ஜனநாயக முறைப்படி புதிய அரசு அமைவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த 2026 தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
