சென்னை,ஏப்.06; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை (ஏப்ரல் 6, திங்கள்) 3 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஏப்ரல் 7, 2026) நடைபெறுகிறது.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடைசி நாளன்று வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய நபர்கள்
இதுபோன்ற சூழலில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (ஏப்ரல் 6, 2026) பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் விவரம் பின்வருமாறு;
எடப்பாடி– கே.பழனிசாமி
கோவை வடக்கு– வானதி சீனிவாசன் (பாஜக)
சாத்தூர் – நயினார் நாகேந்திரன் (பாஜக)
மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)
அவிநாசி – எல்..முருகன் (பாஜக)
போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம் (திமுக)
மதுரை தெற்கு – பூமிநாதன் (மதிமுக)
திருப்போரூர் – பாலு (பாமக)
காட்பாடி – அமைச்சர் துரைமுருகன் (திமுக)
ராணிப்பேட்டை – அமைச்சர் காந்தி (திமுக)
குன்னம் – அமைச்சர் சிவசங்கர் (திமுக)
விருத்தாசலம்– பிரேமலதா (தேமுதிக)
மயிலம் – சி.வி. சண்முகம் (அதிமுக)
சிதம்பரம் – தமிமுன் அன்சாரி (மஜக)
திருக்கோவிலூர் – கௌதம சிகாமணி (திமுக)
தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி (அதிமுக)
குறிஞ்சிப்பாடி – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக)
விருதுநகர் – விஜய பிரபாகரன் (தேமுதிக)
மதுரை கிழக்கு – அமைச்சர் மூர்த்தி (திமுக)
கடைசி நாள் என்பதால் அலைமோதிய வேட்பாளர்கள் கூட்டம்
இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெருமளவில் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. எனவே, கூட்ட நெரிசலை சமாளிக்க டோக்கன் நடைமுறை பின்பற்றப்பட்டது.
நாளை மனுக்கள் பரிசீலனை; 9ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஏப்ரல் 7, செவ்வாய்) நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். உரிய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மனுக்கள் ஏற்கப்பட்ட பின்னரும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற வரும் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
