Skip to content

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்; 59 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆதிக்கத்திற்கு முடிவு – தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை!

சென்னை,மே.05; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. கடந்த 59 ஆண்டுகளாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்த்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தவெக-வின் அதிரடி வெற்றி: தனித்து நின்று மகுடம் சூடிய விஜய்

இந்த தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 233 தொகுதிகளில் (எடப்பாடி நீங்கலாக) தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எம்ஜிஆர் மற்றும் என்டிஆர் ஆகியோரின் வரிசையில், அரசியலில் நுழைந்த முதல் முயற்சியிலேயே முத்திரை பதித்து ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு விஜய் உயர்ந்துள்ளார். “விசில்” சின்னத்தில் போட்டியிட்ட இக்கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கியுள்ளனர்.

சரிவைச் சந்தித்த திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள்

ஆளும் கட்சியாக இருந்த திமுக தலைமையிலான கூட்டணி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. திமுக 164 இடங்களில் போட்டியிட்டு வெறும் 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 73 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

அதேபோல், அதிமுக தலைமையிலான கூட்டணியும் பலத்த அடி வாங்கியுள்ளது. அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட்டு 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற அதிமுக கூட்டணி மொத்தம் 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

கூட்டணி வாரியாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்ட தொகுதிகளும், அதில் வெற்றி பெற்ற இடங்களின் விவரமும் பின்வருமாறு:-

தமிழக வெற்றிக் கழகம் (விசில்) – 233 – 108-ல் வெற்றி

திமுக கூட்டணி – 73-ல் வெற்றி

திமுக (உதயசூரியன்) – 164 – 54

காங்கிரஸ் (கை) – 28 – 5

தே.மு.தி.க. (முரசு) – 10 – 1

விடுதலை சிறுத்தைகள் கட்சி (பானை) – 8 – 2

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (கதிர் அரிவாள்) – 5 – 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (அரிவாள் சுத்தியல்) – 5 – 2

ம.தி.மு.க. (உதயசூரியன்) – 4 – 2

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி) – 2 – 2

மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்) – 2 – 1

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்) – 2 – 1

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்) – 1 – 1

எஸ்.டி.பி.ஐ. (உதயசூரியன்) – 1 – 0

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்) – 1 – 0

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்) – 1 – 0

அதிமுக கூட்டணி – 53-ல் வெற்றி

அதிமுக (இரட்டை இலை) – 165 – 47

பாஜக (தாமரை) – 27 – 1

பாமக (மாம்பழம்) – 18 – 4

அமமுக (குக்கர்) – 11 – 1

தமாகா (தாமரை) – 5 – 0

புதிய நீதிக்கட்சி (இரட்டை இலை) – 1 – 0

இந்திய ஜனநாயக கட்சி (இரட்டை இலை) – 2 – 0

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (தாமரை) – 1 – 0

புரட்சி பாரதம் (இரட்டை இலை) – 1 – 0

சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் (இரட்டை இலை) – 1 – 0

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (இரட்டை இலை) – 1 – 0

தனித்து போட்டி

நாம் தமிழர் கட்சி (விவசாயி) – 234 – 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *