சென்னை, மார்ச்.29; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் திமுக 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதில் கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 164 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது.
அதன்படி, திமுக போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 28, 2026) வெளியிட்டார்.
தற்போதைய அமைச்சர்களில் பெரும்பாலானவர்களுக்கு சீட்
தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- ராதாபுரம் – அப்பாவு (சபாநாயகர்)
- ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன் (முன்னாள் அதிமுக எம்எல்ஏ)
- திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன் (அமைச்சர்)
- முதுகுளத்தோர் – ராஜ கண்ணப்பன் (அமைச்சர்)
- அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அமைச்சர்)
- போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதலமைச்சர்)
- மதுரை மத்தி – பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (அமைச்சர்)
- திருப்பத்துர் – கே.ஆர். பெரியகருப்பண் (அமைச்சர்)
- மதுரை கிழக்கு – மூர்த்தி (அமைச்சர்)
- திருமயம் – ரகுபதி (அமைச்சர்)
- மன்னார்குடி – டி.ஆர்.பி ராஜா (அமைச்சர்)
- திட்டக்குடி – சி.வி.கணேசன் (அமைச்சர்)
- குறிஞ்சிப்பாடி – எம்ஆர் கே பன்னீர்செல்வம் (அமைச்சர்)
- குன்னம் – சிவசங்கர் (அமைச்சர்)
- திருச்சி மேற்கு – கே.என்.நேரு (அமைச்சர்)
- ஆத்தூர் -பெரியசாமி (அமைச்சர்)
- ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி (அமைச்சர்)
- கோயம்புத்தூர் தெற்கு – செந்தில் பாலாஜி (முன்னாள் அமைச்சர்)
- ராசிபுரம் – மதிவாணன் (அமைச்சர்)
- செஞ்சி – மஸ்தான் (முன்னாள் அமைச்சர்)
- திருவண்ணாமலை – ஏ.வ.வேலு (அமைச்சர்)
- பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன் (முன்னாள் அதிமுக அமைச்சர்)
- காட்பாடி – துரைமுருகன் (அமைச்சர்)
- சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன் (அமைச்சர்)
- சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உதயநிதி (துணை முதல்வர்)
- துறைமுகம் – சேகர் பாபு (அமைச்சர்)
- ஆவடி – சா.மு. நாசர் (அமைச்சர்)
- கொளத்தூர் – மு.க. ஸ்டாலின் (முதலமைச்சர்)
- ஒரத்தநாடு – வைத்திலிங்கம் (முன்னாள் அதிமுக அமைச்சர்)
- தூத்துக்குடி -கீதா ஜீவன் (அமைச்சர்)
- திருச்சுழி – தங்கம் தென்னரசு (அமைச்சர்)
- காங்கேயம் – மு.பெ. சுவாமிநாதன் (அமைச்சர்)
தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு
நாகர்கோவில் – ஆஸ்டின், திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ், திருக்கோவிலூர் – பொன் கௌதம சிகாமணி (பொன்முடிக்குப் பதிலாக அவரது மகன்), தியாகராயநகர் – ராஜா அன்பழகன் (மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகன்), ஆயிரம் விளக்கு – மருத்துவர் எழிலன் (தற்போதைய எம்எல்ஏ), சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ் (தற்போதைய எம்எல்ஏ), எழும்பூர் – தமிழன் பிரசன்னா (தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்), விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா, பெரம்பூர் – ஆர்டி சேகர் உள்ளிட்டோர் அடங்குவர்
60க்கும் மேற்பட்ட புதுமுகம், 125 பட்டதாரிகள், 18 பெண்கள்
திமுக போட்டியிடும் 164 இடங்களில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 125 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதில் மருத்துவர்கள் 15 பேர். பொறியாளர்கள் 17 பேர். வழக்கறிஞர்கள் 29 பேர். முனைவர்கள் 7 பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 18 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவினாசி தனித் தொகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் மருத்துவர் கோகிலாமணி களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அவினாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கோகிலாமணி திமுகவின் இளம் வேட்பாளர் ஆவார்.
