Skip to content

தொகுதி மறுவரையறை கூட்டத்தை 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு – 19 பேர் பங்கேற்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பரபரப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 57 எம்.பி.க்களில் 37 பேர் புறக்கணித்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டத்தை திமுக, தேமுதிக, மநீம, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 57 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அவர்களில் 37 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 எம்.பி.க்கள் பங்கேற்பு

அதேநேரத்தில், காங்கிரஸ், விசிக, CPI, CPIM மற்றும் IUML கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுதாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசனை

மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *