காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
நீட் எதிர்ப்பு மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதில் என்ன சிக்கல்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் நெல்லையில் மாநாடு நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக நெல்லையில் மாநாடு நடத்த திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது.
மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து நாளைய விசாரணையில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும்.
