டெல்லி, ஏப்.01; இந்தியாவில் இன்று (ஏப்ரல் 1, 2026) முதல் புதிய நிதியாண்டு (2026-27) தொடங்குவதுடன், பல முக்கிய நிதி மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன.
குறிப்பாக, 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் 2025 (Income Tax Act, 2025) அமலுக்கு வருகிறது. இது ஊழியர்களின் சம்பள அமைப்பு மற்றும் வரிச் சேமிப்பில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
- கையில் கிடைக்கும் சம்பளம் ஏன் குறையலாம்? (New Labour Codes): புதிய தொழிலாளர் சட்டங்களின் (New Labour Codes) கீழ் ‘சம்பளம்’ (Wages) என்பதற்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) மொத்த சம்பளத்தில் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும்.
PF பங்களிப்பு உயர்வு: அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும் போது, அதனுடன் இணைக்கப்பட்ட உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பங்களிப்பும் அதிகரிக்கும்.
விளைவு: பிஎஃப் பங்களிப்பு அதிகமாகப் பிடிக்கப்படுவதால், ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கித் கணக்கிற்கு வரும் ‘இன்-ஹேண்ட்’ சம்பளம் சற்றே குறையக்கூடும். ஆனால், இது உங்கள் நீண்டகால சேமிப்பிற்கு (கிராஜுவிட்டி மற்றும் ஓய்வூதியம்) சாதகமாக அமையும்.
- பழைய வரி முறையில் புதிய வரி விலக்குகள்
கல்வி மற்றும் விடுதி உதவித்தொகை: குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மாதத்திற்கு ரூ. 100-லிருந்து ரூ. 3,000 ஆகவும், விடுதி செலவுக்கான விலக்கு ரூ. 300-லிருந்து ரூ. 9,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உணவு கூப்பன்கள் (Meal Cards): இதுவரை ஒரு வேளை உணவுக்கு ரூ. 50 ஆக இருந்த வரி விலக்கு வரம்பு, இப்போது ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு ஊழியர் சுமார் ரூ. 1.05 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும்.
பரிசு வவுச்சர்கள்: நிறுவனங்கள் வழங்கும் பரிசு கூப்பன்களுக்கான வரி விலக்கு ரூ. 5,000-லிருந்து ரூ. 15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- வீட்டு வாடகை (HRA) மற்றும் பெருநகரங்கள் மாற்றம்
வீட்டு வாடகை சலுகை (HRA) பெறுவதில் ‘மெட்ரோ நகரங்கள்’ பட்டியலில் இப்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னையுடன் பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் வசிப்பவர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 50% வரை HRA வரி விலக்கு கோரலாம்.
- கார் மற்றும் ஓட்டுநர் சலுகைகளுக்கான வரி உயர்வு
நிறுவனத்தால் வழங்கப்படும் கார்களைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ‘Perquisite Tax’ எனப்படும் வரிச் சுமை அதிகரித்துள்ளது.
- 6 லிட்டர் இன்ஜின் கொண்ட கார்களுக்கு மாதத்திற்கு ரூ. 8,000-மும், அதற்கு மேல் உள்ள கார்களுக்கு ரூ. 10,000-மும் வரிக்குரிய வருமானமாகக் கணக்கிடப்படும். ஓட்டுநர் (Chauffeur) வசதி இருந்தால் கூடுதலாக ரூ. 3,000 வரிக்குரிய வருமானத்தில் சேர்க்கப்படும்.
- நிலையான கழிவு (Standard Deduction) புதிய வரி முறையின் (New Tax Regime) கீழ் நிலையான கழிவு ரூ. 50,000-லிருந்து ரூ. 75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ரூ. 12.75 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட சம்பளதாரர்களுக்கு வரிச் சுமையைக் குறைக்க உதவும்.
புதிய வரி விதிப்பு முறை ஓய்வூதியப் பயன்கனை அதிகரிக்கும்
இன்று (ஏப்ரல் 1, 2026) முதல் அமலாகும் இந்த மாற்றங்கள் குறுகிய காலத்தில் உங்கள் கைக்கு வரும் சம்பளத்தைக் குறைப்பது போல் தோன்றினாலும், நீண்டகால நோக்கில் உங்கள் சேமிப்பையும் ஓய்வூதியப் பயன்களையும் வலுப்படுத்தும். வரிச் சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள உங்கள் சம்பள அமைப்பை (Salary Structure) மறுசீரமைக்க உங்கள் நிறுவனத்திடம் ஆலோசிப்பது நல்லது.
