அன்பு, அறிவு, தொழிலாளர் உரிமை, இரக்க சிந்தனையை வலியுறுத்தியவர் முகமது நபி – மு.க.ஸ்டாலின்
மிலாது நபி வாழ்த்துகள் தெரிவித்து இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபியை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அன்பு, அறிவு, தொழிலாளர் உரிமை மற்றும் இரக்க சிந்தனையை வலியுறுத்தியவர் அண்ணல் முகமது நபி என குறிப்பிட்டுள்ளார்.
அன்பு வழியில் பயணிப்போம்
முகமது நபி காட்டிய அன்பு வழியில் பயணிக்கும் இஸ்லாமியர்களுக்கு மிலாது நபி வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்பு, சகோதரத்துவம், இரக்கம் உள்ளிட்ட மனிதநேயக் கருத்துகளை முன்னிறுத்தி மிலாது நபி கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.
