Skip to content

முதலீட்டாளர்கள் மாநாடு; மதுரைக்கு வெறும் 4% மட்டுமே…?

மதுரை: மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட ரூ.36,660 கோடி முதலீடுகளில், மதுரை மாவட்டத்திற்கு வெறும் 4 சதவிகிதம் முதலீடுகள் மட்டுமே வந்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னை, ஒசூர், தூத்துக்குடி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கேற்ப Madurai Rising என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதன்படி, மதுரையில் நேற்று (078.12.2025) முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தமாக ரூ.36,660 கோடி முதலீடுகள் வரவுள்ளதாகவும், 91 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. ஆனால் இந்த முதலீடுகளில் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே மதுரை மாவட்டத்திற்கான முதலீடுகளாக அமைந்துள்ளது. மதுரைக்கான மிகப்பெரிய முதலீடாக பென் ஹாய் க்ரூப் தரப்பில் ரூ.720 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் வாயிலாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐடி துறையை பொறுத்தவரை பெரிய அளவிலான முதலீடுகளே இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரையில் நடைபெற்ற முதலீட்டார்கள் மாநாட்டில் மதுரையில் ரூ.1,350 கோடி முதலீடுகளும், தேனி மாவட்டத்திற்கு ரூ.2,270 கோடி முதலீடுகளும் ஈர்க்கப்பட்டுள்ளன. சிவகங்கையில் ஒரேயொரு முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து முதலீடுகளும் காஞ்சிரம், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், தூத்துக்குடி, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *