Skip to content

“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை!” – முதல்வர் விஜய்

“காவல்துறை அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக் கூடாது; மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்”

முதல்வர் விஜய் காவல் துறை பதிலுரையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த முதல்வர் விஜய், காவல்துறை என்பது குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல எனக் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக் கூடாது என்றும், மக்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

மேலும், “குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை என்பதே இந்த அரசின் நிலைப்பாடு” என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் மீதான நம்பிக்கையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம் எனவும் முதல்வர் விஜய் தனது பதிலுரையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *