முதல்வர் விஜய் தரப்பு பதில் தொடர்பான முக்கிய தகவல்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு தனது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் முதல்வர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
குழந்தைகளை பிரசாரத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு
தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என முதல்வர் விஜய் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து, தனது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதி தொடர்பான புகார்களுக்கு ஆதாரம் இல்லை
வெளிநாடுகளில் இருந்து நீதி உதவி பெற்றதாக கூறப்படும் புகார்களுக்கும் எந்தவித ஆதாரமும் இல்லை என முதல்வர் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்ததாகவும் ஆதாரம் இல்லை
வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என முதல்வர் விஜய் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக வெற்றியை செல்லாததாக்க போதுமானவை அல்ல என தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
