Skip to content

விக்கிரவாண்டி தொகுதி; தக்க வைக்க திமுகவும் தட்டிப்பறிக்க அதிமுகவும் தீவிரம்: முந்துவது என்னவோ ‘சூரியன்’ தான்!

விக்கிரவாண்டி தொகுதி (எண் – 75)

2008ஆம் ஆண்டு மறுவரையறைக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி.

இதுவரை இரண்டு இடைத்தேர்தல்கள் உள்பட ஐந்து முறை தேர்தலை சந்தித்துள்ள இத்தொகுதியில், திமுக மூன்று முறையும், அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இத்தொகுதியில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதர சமூகத்தினர் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

2021 தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் புகழேந்தி காலமானதால், 2024ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மீண்டும் வென்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டது.

திமுகவில் தற்போதைய எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா?

2024 இடைத்தேர்தலில், அன்னியூர் சிவா 1,24,000 வாக்குகளைப் பெற்றார். பாமகவைச் சேர்ந்த சி.அன்புமணி 56,000 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு சுமார் 10,600 வாக்குகளும் கிடைத்தன. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை.

வரும் தேர்தலில்,  தற்போதைய திமுக எம்எல்ஏவான அன்னியூர் சிவா தான் மீண்டும் போட்டியிடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில், முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்செல்வனும், வடக்கு ஒன்றியச் செயலாளர் எசாலம் பன்னீரும் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர்.

தவெகவிற்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்?

எவ்வளவு வாக்குகளைப் பெறும் என்று யாராலும் கணிக்க முடியாத தவெக தான்  அனைத்துக் கட்சிகளுக்கும் அச்சுறுத்தல்.

ஆனாலும், மூத்த அமைச்சர்கள் உடனான அன்னியூர் சிவாவின் நட்பு, கட்சியின் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் தற்போதைய சூழலில் திமுக முந்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *