Skip to content

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம்: முழு விவரங்கள்!

தமிழகத்தில் விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மானிய விலையில் மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்களை இந்தச் செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.

முக்கிய அம்சங்கள்:

  • மானியம் விவரம்: பம்ப்செட்டின் மொத்த விலையில் 50% மானியமாக, அதிகபட்சமாக ரூ.15,000 வரை வழங்கப்படும்.
  • பயன்பெறும் முறை: நுண்ணீர்ப் பாசன அமைப்பு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் ஏற்கனவே அமைத்தவர்கள் அல்லது புதிதாக அமைத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இத்திட்டின் மூலம் பயனடையலாம்.
  • பயனாளி தகுதிகள்: அனைத்து வகையான விவசாயிகளும் இத்திட்டின் கீழ் பயன்பெறலாம். எனினும், சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • தேர்வு செய்யும் முறை: வேளாண்மை பொறியியல் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 4 நட்சத்திர குறியீட்டிற்கு குறையாத மின் மோட்டார் பம்ப்செட்டுகளை விவசாயிகள் தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
  • எங்கு பொருந்தும்: மின் இணைப்புடன் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுகளில் மின் மோட்டார் பொருத்துவதற்கும், திறன் குறைந்த பழைய பம்ப்செட்டுகளுக்கு மாற்றாக புதிய மின் மோட்டார் பம்ப்செட்டுகளைப் பொருத்துவதற்கும் மானியம் வழங்கப்படும்.

சிறப்பு கூடுதல் மானியம்:

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 50% மானியமான ரூ.15,000 உடன் கூடுதலாக 20% மானியமாக ரூ.6,000 சேர்த்து, ஆகமொத்தம் அதிகபட்சமாக ரூ.21,000 வரை அல்லது பம்ப்செட்டின் மொத்த விலையில் 70% – இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

குறிப்பு: இத்திட்டம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *