Skip to content

பட்டா வழங்க சிறப்புத் திட்டம் – 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா

நத்தம் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க சிறப்பு திட்டம்

வீட்டு மனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நத்தம் நிலங்களில் குடியிருந்து வரும் மக்களில் பிரச்னை இல்லாத இடங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகள் கட்டி வசித்து வரும் தகுதி வாய்ந்த 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டா இல்லாத நபர் இல்லை என்ற நிலையை உருவாக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாகவும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • நத்தம் நிலங்களில் பிரச்னை இல்லாத இடங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை.
  • கிராம நத்தம் காலி மனைகளில் வீடுகட்டி வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்.
  • தகுதி வாய்ந்த 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் பட்டா இல்லாத நபர் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *