Skip to content

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழ்நாட்டில் வாக்களித்த விவகாரம்; 17 பேர் கைது! காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை,மே.14; இந்​திய நாட்டு குடிமக்​கள் மட்​டுமே இந்​தி​யா​வில் நடை​பெறும் தேர்தல்​களில் வாக்​களிக்க முடி​யும். வெளி​நாடு​களில் நிரந்​தரமாகத் தங்​கி​யிருப்​ப​தோடு, அந்த நாட்டு சட்டப்பூர்வ குடிமகனாகவும் மாறி குடி​யுரிமை பெற்​றுவிட்​டால் அவர்​களது இந்​திய பாஸ்​போர்ட்​டுகள் ரத்து செய்​யப்​பட்​டு, அந்த நாடு​களின் பாஸ்​போர்ட்​டு​கள் வழங்​கப்​பட்​டு​விடும்.
அப்​படிப்​பட்ட வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்ற இந்​தி​யர்​கள், இந்​தியா​வுக்கு வந்து செல்லலாம். ஆனால், இந்​தி​யா​வில் நடக்​கும் தேர்​தல்​களில் வாக்​களிக்க முடியாது.

வெளிநாடு குடியுரிமை பெற்றவர்கள் தமிழ்நாடு தேர்தலில் ஓட்டு!

இந்​நிலை​யில்​, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாடுகளில் வசிக்கும் பல தமிழர்கள் சொந்த ஊர் வந்து வாக்களித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் (Immigration Officers) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கைவிரலில் மை உள்ளதா?- விமானநிலையத்தில் கண்காணிப்பு

வெளி​நாடு​களுக்​குச் செல்ல விமான நிலை​யம் வரும் பயணி​களின் கை விரல்​களைக் கண்​காணிக்க உத்​தர​விடப்​பட்​டது. வாக்​களித்த அடையாள மை இருந்​து, அவர்​கள் வெளி​நாடு வாழ் இந்​திய குடியுரிமை பெற்ற பயணி​யாக இருந்​தால், அவர்​களை விமானங்களில் பயணம் செய்ய அனு​ம​திக்க வேண்​டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, வெளிநாடு செல்லும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

17 பேர் கைது: காவல்துறையிடம் ஒப்படைப்பு

விமான நிலைய சோதனையின் போது, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற 17 பேரின் விரலில் தேர்தல் மை இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களின் விமானப் பயணங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் மீது தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணை: வெளி​நாடு​களில் நிரந்தர குடி​யுரிமை பெற்​றிருந்​தா​லும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட (S.I.R) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களில் இவர்​கள் ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பித்து வாக்​காளர் அடை​யாள அட்​டைகளைப் பெற்று வாக்​களித்​த​தாக தெரிய​வந்​துள்​ளது. இந்த விவ​காரம் குறித்து முழு விசா​ரணை நடத்த காவல் துறைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் கவனத்திற்கு….

இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள், உணர்ச்சிவசப்பட்டோ அல்லது தெரியாமலோ இந்தியாவில் வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும். வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் இந்தியத் தேர்தலில் வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *