Skip to content

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து; ரசிகர்கள் அதிர்ச்சி

இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடனான திருமணத்தை பிரபல கிரிக்கெட் வீராங்கனை  ஸ்மிரிதி மந்தனா ரத்து செய்துவிட்டார். இச்செய்தி  அவரது ரசிகர்கள்  மத்தியிலும், கிரிக்கெட் வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிரபல இசையமைப்பாளரும்  தனது காதலருமான பலாஷ் முச்சல் என்பவரை, கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற கையோடு திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. மணவிழாவுக்கான  ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவந்தன.  மந்தனாவின் திருமணம் அவரது ரசிகர்களிடமும்  சமூக ஊடகங்களிலும் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியதுடன் பேசுபொருளாகவும் மாறியது. இதுபோன்ற சூழலில், திருமணம் நடைபெறவிருந்த நாளன்று மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ்-க்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஸ்மிருதியின்  குடும்பம் கவலையில் ஆழ்ந்தது. வருங்கால மாமனார் உடல் நலம் பாதிக்கப்பட்ட தகவலை கேள்விப்பட்டவுடன் பலாஷ் முச்சல்  மனஅழுத்தத்திற்கு ஆளாகி, உடல்நலம் குன்றி அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதனையடுத்து மந்தனா – பலாஷ் திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் ஸ்ரீனிவாஸூம், பலாஷ் முச்சலும் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பினார். அடுத்த சில நாட்களில்  பலாஷ் முச்சல் உடனான  திருமணம் தொடர்பான அனைத்துப்  பதிவுகளையும் தனது சமூகவலைதளத்திலிருந்து மந்தனா நீக்கினார். குறிப்பாக  மணவிழா அழைப்பிதழையும்  மந்தனா நீக்கிவிட்டார். அனைத்தும் நீக்கப்பட்டதைப் பார்த்த மந்தனாவின் ரசிகர்கள்  அதிர்ச்சியடைந்தனர். இவ்விசயம் உடனே  சமூக வலைதளங்களில்  பேசு பொருளாகி, அனல் பறந்தது. பலாஷ் முச்சலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரைத்தான்  மணந்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.  இது வதந்தியாக கூட இருக்கலாம் என்று பேசப்பட்டது.  இதனால் மந்தனா மற்றும் பலாஷின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர்.  ஸ்மிரிதி மந்தனாவுடன் தனது மகனுக்கு  நிச்சயம் திருமணம் நடைபெறும் என்று பலாஷ் முச்சலின்  தாயார் அமிதா முச்சல்  கூறியிருந்தார். அதன் பிறகும் முச்சலுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக  சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.  பின்னர் மந்தனா சமூக ஊடகங்களில் பதிவிட்ட புகைப்படங்களில் , திருமண நிச்சயத்தின் போது பலாஷ் முச்சல் அணிவித்த மோதிரம் இல்லாமல் காட்சியளித்தார். இதனால் பலாஷ் – ஸ்மிருதி திருமணம் தொடர்பான சந்தேகம் அதிகரித்தது.  திருமணத்திற்கான புதிய தேதி அறிவிக்கப்படாமல்  நாட்கள் கடந்ததால் ,சமூக ஊடகங்களில் பேசப்பட்ட தகவலில் உண்மை இருக்குமோ என்று பொதுவெளியிலும் பேச்சு  கிளம்பியது. இதுபோன்ற சூழலில், பலாஷ் முச்சலுடனான திருமணத்தை ஸ்மிருதி மந்தனா ரத்து செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் வெளிப்படையாகப் பேச வேண்டியது முக்கியம்“  எனப் பதிவிட்டு தனது திருமணம் குறித்த மௌனத்தை கலைத்து,  சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி  வைத்துள்ளார். கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி ஏராளமான ஊகங்கள் வெளியாகின – இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நான் உணர்கிறேன்நான் மிகவும் தனிப்பட்ட நபர்அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன்என்று ஸ்மிருதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *