Skip to content

தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் – ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு.

மூத்த குடிமக்களுக்காக 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்

1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் 2026–27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். மூத்த குடிமக்களுக்கு மருத்துவ சேவைகளை அவர்களது பகுதிகளிலேயே வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கிராமப் பஞ்சாயத்துகளுக்கே சென்று மருத்துவ சேவை

இந்த நடமாடும் சிகிச்சை மையங்கள் கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரடியாகச் சென்று மூத்த குடிமக்களுக்கு இலவச உடல் பரிசோதனை, தேவையான மருந்துகள் மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும். இதன் மூலம் முதியோர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவர், செவிலியர், இயன்முறை மருத்துவருடன் சேவை

ஒவ்வொரு நடமாடும் சிகிச்சை மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு இயன்முறை மருத்துவர் இடம்பெற்று மருத்துவ சேவைகளை வழங்குவார்கள். முதியோரின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *