Skip to content

Bharat Petroleum நிறுவனத்தில் 248 வேலைவாய்ப்புகள் – ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை ஊதியம்..!

Bharat Petroleum நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Junior Executive, Secretary, Associate Executive உள்ளிட்ட மொத்தம் 248 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த வேலைவாய்ப்பிற்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறையில் நல்ல ஊதியத்துடன் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் மற்றும் பதவியைப் பொறுத்து சம்பள விவரங்கள் மாறுபடும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறாதீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BPCL Recruitment 2026

https://ibpsreg.ibps.in/bpclapr26/basic_details.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *