Skip to content

சென்னைக்கு புதிய மாஸ்டர் திட்டம் – ஹெலிபேடு, வாட்டர் மெட்ரோ உள்ளிட்ட அதிநவீன வசதிகள்

சென்னை நகர வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மூன்றாவது மாஸ்டர் திட்டத்தில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய திட்டத்தில் ஹெலிபேடுகள், வாட்டர் மெட்ரோ சேவைகள், ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிகள் மற்றும் நகர மறுபயன்பாட்டு திட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன.

முந்தைய மாஸ்டர் திட்டங்களிலிருந்து மாறுபட்டு, இந்த திட்டம் நகர வளர்ச்சியுடன் பொருளாதார விரிவாக்கத்தையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பலதரப்பட்ட இணைப்பு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நகரின் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாட்டர் மெட்ரோ திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும், அதிநவீன நகர கட்டமைப்பை உருவாக்க பல்வேறு புதிய முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

தமிழக முதலமைச்சர் Joseph Vijay தலைமையில் நகர வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் இந்த மாஸ்டர் திட்டம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *