Skip to content

அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு தீர்வு காண இந்தியாவுக்கே தகுதி: லாவ்ரோவ் கருத்து

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு நீண்டகால தீர்வு காண இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் மோதலை தற்காலிகமாக சமாளிப்பதில் பாகிஸ்தான் உதவியளிக்கக்கூடும் என்றாலும், நிலையான அமைதியை உருவாக்க இந்தியாவின் ராஜதந்திர அனுபவமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேற்காசிய பகுதியில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் ஈரான் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக அரசியல் அரங்கில் இந்தியா நடுநிலையான மற்றும் நம்பகமான நாடாக பார்க்கப்படுவதால், பல சர்வதேச பிரச்சினைகளில் சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்த கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, மேற்காசிய அமைதி முயற்சிகளில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *