Skip to content

WhatsApp-ல் புதிய Green Dot அம்சம்: ஆன்லைனில் இருப்பவர்களை எளிதாக அறியலாம்!

ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு சோதனை; விரைவில் iPhone பயனர்களுக்கும் அறிமுகம்

WhatsApp செயலியில் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய Green Dot Indicator (பச்சை புள்ளி குறியீடு) அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி மூலம், தற்போது ஆன்லைனில் இருக்கும் தொடர்புகளை (Contacts) பயனர்கள் எளிதாகக் கண்டறிய முடியும்.

தற்போது இந்த Green Dot Indicator அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta) பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, விரைவில் iOS (iPhone) பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தின்படி, ‘Last Seen’ மற்றும் ‘Online Status’ ஆகியவற்றை தனியுரிமை (Privacy) அமைப்பில் மறைத்து வைத்திருக்கும் பயனர்களின் கணக்குகளில் Green Dot தோன்றாது. இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய இந்த அம்சம், ஆன்லைனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் விரைவாக உரையாடலைத் தொடங்க பயனர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தனியுரிமை அமைப்புகளை மாற்றாமல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *