“ரசாயனக் கழிவுகள் கலந்ததா என ஆய்வு செய்ய வேண்டும்; சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்”
மேட்டூர் அணை நீர் பச்சையாக மாறியதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ரசாயனக் கழிவுகள் கலந்ததால் மேட்டூர் அணை நீரின் நிறம் மாறி பச்சையாக காட்சியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கான உண்மையான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
“உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும்”
மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதிகளில் நீர்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இதுபோன்ற சுகாதார சீர்கேடு ஏற்படுவது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரணத்தை கண்டறிந்து பராமரிக்க வேண்டும்
மேட்டூரில் தண்ணீர் அசுத்தம் அடைவதற்கான காரணங்களை முறையாக கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்த்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, நீரின் தரம் பாதிக்கப்படாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
