Luna Band fitness tracker இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது உலகளவில் ஷிப்பிங் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 வண்ணங்களில் Luna Band
புதிய Luna Band இந்தியாவில் Aloe Green, Desert Beige, Onyx Black ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த screenless fitness tracker, பாரம்பரிய ஸ்மார்ட்வாட்ச்களைப் போல டிஸ்ப்ளே இல்லாமல் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தரவுகளை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Apple மற்றும் Android ஆதரவு
Luna Band Apple மற்றும் Android சாதனங்களுடன் இணைந்து செயல்படும். இதில் இதயத் துடிப்பு, SpO2, தூக்க முறைகள், VO2 Max உள்ளிட்ட பல்வேறு உடல்நலத் தரவுகளை கண்காணிக்க முடியும்.
LifeOS தளத்தின் மூலம் பயனர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து தனிப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் Luna Band உருவாக்கப்பட்டுள்ளது.
10 நாட்கள் வரை பேட்டரி
ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி செயல்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த fitness tracker-ஐ பயன்படுத்த தனி subscription கட்டணம் தேவையில்லை என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்திய wearable சந்தையில் புதிய வகையான screenless fitness tracker ஆக Luna Band கவனம் பெற்றுள்ளது.
