விமர்சனங்களுக்கு மத்தியில் வசூலில் மாஸ் காட்டிய சீன அனிமேஷன் திரைப்படம்
Niu Lai என்ற சீன அனிமேஷன் திரைப்படம் வெறும் ரூ.19,000 செலவில் உருவாக்கப்பட்ட நிலையில், ரூ.28 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், 2026ஆம் ஆண்டின் மிக மோசமான படங்களில் ஒன்று என பரவலாக விமர்சிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
வசூலில் எதிர்பாராத சாதனை
குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட Niu Lai, வெளியான பிறகு எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், தற்போது வசூலில் கவனம் ஈர்த்துள்ளது.
வெறும் ரூ.19,000 செலவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்தப் படம், ரூ.28 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AI பயன்படுத்தாமல் உருவாக்கப்பட்ட படைப்பு
இந்தப் படத்திற்கு சீனர்கள் மத்தியில் தற்போது ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, திரைப்படத்தை உருவாக்குவதில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், முழுமையாக கைவேலையாக உருவாக்கப்பட்ட அசல் மனிதப் படைப்பு என கூறப்படுவது கவனம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, ஆரம்பத்தில் படத்தை விமர்சித்தவர்களிடையே தற்போது படத்திற்கு ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
2026ஆம் ஆண்டின் மிக மோசமான படம் என விமர்சிக்கப்பட்டு வைரலான Niu Lai, தற்போது அதன் குறைந்த தயாரிப்பு செலவு மற்றும் அதிக வசூல் காரணமாக மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு அனிமேஷன் திரைப்படம் எதிர்பாராத அளவில் வசூல் செய்திருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
