Skip to content

“மூன்றே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு” – தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது; தொழில்துறையை அரசியலாக பார்க்கக் கூடாது என சட்டமன்றத்தில் பேச்சு

ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்பது தாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் ஈர்த்துள்ளதாகவும், இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் போவதாகவும் சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், மூன்றே மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்பது இதுவரை எந்தவொரு அரசாங்கமும் செய்திராத சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் மூலம் சுமார் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

“தொழில்துறையை அரசியலாக பார்க்கக் கூடாது”

தொழில்துறை என்பது மிகவும் சென்சிட்டிவான டாப்பிக் என்றும், எனவே தொழில்துறை சார்ந்த விஷயங்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு

தமிழ்நாட்டை 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்க்க அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

தொழில்துறை முதலீடுகள், புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *