ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான UPI பரிவர்த்தனைகள் – NPCI தகவல்
UPI Transaction Record புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முன் எப்போதும் இல்லாத அளவாக 2,451 கோடி முறை UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2026 ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 20% வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
மேலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.29.82 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு, QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி மற்றும் வங்கிகளுக்கு இடையேயான உடனடி பணப்பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் UPI பயன்பாடு இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பதிவான இந்த புதிய சாதனை, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
